டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
தென்னிலை அருகே மது அருந்த தாய் பணம் தராததால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள செஞ்சேரிவலசை கிராமத்தில் சேர்ந்தவர் திருமலை. இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 34). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் மது குடிப்பதற்காக தனது தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.ஆனால் இவரது தாய் பணம் தர மறுத்துள்ளார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ஆனந்தகுமார் தனது தாயின் சேலையில் எடுத்து வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
தற்கொலை
இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் ஆனந்தகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.