மது குடித்ததை மனைவி தட்டி கேட்டதால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


மது குடித்ததை மனைவி தட்டி கேட்டதால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

மது குடித்ததை மனைவி தட்டி கேட்டதால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் குமார் (வயது 42). டிரைவர். இவருக்கு கல்பனா (40) என்ற மனைவியும், கவின் (10) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக லோகேஷ் குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தன்னுடைய கணவருடன் கோபித்துக்கொண்டு கல்பனா தாய் வீடான வந்தவாசிக்கு சென்று தங்கினார்.

வீட்டில் இருந்த லோகேஷ் குமார் தன்னுடைய மனைவி மற்றும் மகன் பிரிந்து சென்ற ஏக்கத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கல்பனா மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து லோகேஷ் குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story