வாய்க்காலில் டிரைவர் பிணம்
மயிலாடுதுறை அருகே வாய்க்காலில் டிரைவர் பிணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே பாலாக்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் மகன் கார்த்திக் (வயது 32). தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்த இவர் கடந்த 2 மாத காலமாக சரக்கு ஆட்டோ ஒட்டி வந்துள்ளார். கடந்த 29-ந் தேதி வேலைக்கு செல்வதாக தனது மனைவி சரண்யாவிடம் கூறிவிட்டு சென்ற கார்த்திக் பின்னர் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. நேற்றுமுன்தினம் கடுவங்குடி நடுக்கண்ணி வாய்க்கால் அருகே இறந்த நிலையில் கார்த்திக்கின் உடல் கிடந்தது. இதனை கண்ட சரண்யா மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.