டிரைவர்கள் பேரணி


டிரைவர்கள் பேரணி
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் டிரைவர்கள் பேரணி நடந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன சட்டத்தை மாற்றம் செய்யக்கோரி சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் மற்றும் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் சங்க பாதுகாப்பு பேரமைப்பு சார்பில் பேரணி நடந்தது. இதற்கு சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்க மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேசன், சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், கவுரவ தலைவர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் மோட்டார் வாகன சட்டத்தை மாற்றம் செய்ய வேண்டும், ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், ஓட்டுநர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், அத்திப்பள்ளி சோதனை சாவடியை அகற்ற வேண்டும் என்பன உள்பட கோரிக்கையை வலியுறுத்தி டிரைவர்கள் கோஷமிட்டனர். மந்தைவெளியில் தொடங்கிய பேரணி கச்சிராயபாளையம் சாலை வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை சென்றது. இதில் சங்க பொருளாளர் தங்கராஜ், நிர்வாகிகள் பெரியசாமி, சஞ்சீவ்காந்தி, எழிலரசன், நல்லதம்பி, தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் முருகேசன், பொருளாளர் தீனதயாளன், நிர்வாகிகள் விஜயகுமார் மணிகண்டன், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story