ஊஞ்சலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து வடமாநில சிறுவன் சாவு


ஊஞ்சலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து வடமாநில சிறுவன் சாவு
x

ஊஞ்சலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து வடமாநில சிறுவன் பரிதாபமாக இறந்தார்

ஈரோடு

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து வடமாநில சிறுவன் பரிதாபமாக இறந்தார்.

வடமாநில சிறுவன்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சோட்டு குமார் (வயது 33). அவருடைய மனைவி அனிதா டிகல் (25). இவர்களுடைய மகன் லத்திக்குமார் (5). இந்த நிலையில் சோட்டுகுமார் தனது குடும்பத்துடன் 5 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் வந்துள்ளார். ஊஞ்சலூர் பகுதியில் தங்கியிருந்து கணபதிபாளையம் நால்ரோடு அருகே உள்ள சிமெண்ட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் கணவனும், மனைவியும் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 3.30 மணி அளவில் சோட்டுகுமாரும், அனிதா டிகலும் பணியில் இருந்துள்ளார்கள். மாலை 5 மணி அளவில் லத்திக்குமார் அருகே விளையாடி கொண்டிருந்தார். திடீரென அவரை காணவில்லை.

கிணற்றில் விழுந்து சாவு

இதனால் அவரை பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது லத்திக்குமார் அருகே உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு் லத்திக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் லத்திக்குமார் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story