போதை பொருள்ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


போதை பொருள்ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் போதை பொருள்ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை கல்லூரி ஜூனியர் ஜேசி கிளப் மற்றும் நாட்டு நலப் பணித்திட்டம் ஆகியவை இணைந்து நடத்தின. நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முகவேல்

தலைமை தாங்கினார். முதல்வர் கே.காளிதாச முருகவேல் முன்னிலை வகித்தார். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் வி.கலைவாணி வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கே.வெங்கடேஷ் கலந்து கொண்டு பேசினார்.

கோவில்பட்டி உதவி கலெக்டர் கே.மகாலட்சுமி போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியைக் கூற நேஷனல் பொறியியல் கல்லூரி, லட்சுமிஅம்மாள் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் உறுதி மொழியை ஏற்றனர். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து கலந்துரையாடிய மாணவர்க ளுக்கு பரிசுகளை வழங்கினார்.

மின் மற்றும் மின்னணுவியல் துறை உதவிப் பேராசிரியர் கே.குமார் நன்றி கூறினார்.


Next Story