அக்டோபர் 2ம் தேதி போதை விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
அக்டோபர் 2ம் தேதி போதை விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
போதை விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் குறித்த போஸ்டரை துவக்கி வைத்த பின் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஒவ்வொரு வருடமும் பள்ளிகள் தொடங்கு போது விழிப்புணர்வு நிகழ்ச்சியோடு துவங்கும். தொலைக்காட்சிகளும் புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதில் நாங்களும் கலந்து கொள்வோம்.கற்றல் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி எடுக்கிறோம்.
போதையில் ஈடுபட்டவர்கள் உடன் இருப்பவர்கள் சொல்வதை கேட்டு விளையாட்டாக தான். ஆரம்பிக்கிறார்கள். போதைக்கு அடிமையாவது தான் அவமானம். அதை திருத்திக்கொள்ள மருத்துவரை அணுகுவது அவமானம் இல்லை.
போதை இல்லா பாதை இயக்கம் சார்பில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க அக்டோபர் 2ம் தேதி தழுவிய போதை விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் சென்னையில் தொடங்க உள்ளது.
தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளம் பள்ளியில் நடந்த தீண்டாமை விவகாரம் குறித்து முதன்மை கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். சம்பவம் நடந்த நாளில் 12 மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வரவில்லை என விளக்கம் கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.