போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்


போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இத்தலாரில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

நீலகிரி

மஞ்சூர்,

மஞ்சூர் காவல்துறை சார்பில், கஞ்சா இல்லாத கிராமம் மற்றும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் இத்தலாரில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இதற்கு மஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எமரால்டு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இத்தலார் ஊர் தலைவர் சுரேஷ், இத்தலார் ஊராட்சி மன்ற தலைவர் பந்தையன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் உமாராஜன் மற்றும் சுற்றுவட்டார ஊர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் போதை ஒழிப்பு உறுதிமொழியை பொதுமக்கள் எடுத்தனர்.


Next Story