போதை பொருள் விழிப்புணர்வு பேரணி


போதை பொருள் விழிப்புணர்வு பேரணி
x

போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களால் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியபடி முதுகுளத்தூர் காந்தி சிலையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு கோஷங்களுடன் பஸ் நிலையம் வந்தடைந்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி ஏற்பாடுகளை பரமக்குடி கோட்ட ஆய அலுவலர் சுகுமாரன் மற்றும் கோட்ட வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகன் ஆகியோர் செய்து இருந்தனர்.


Related Tags :
Next Story