போதை விழிப்புணர்வு வாரம் - அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்


போதை விழிப்புணர்வு வாரம் - அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
x

போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

சென்னை,

போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் தற்போது இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பள்ளிகளில் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அவ்வகையில் வளரிளம் பருவத்தினரை புரிந்து கொள்ளுதல், போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிதல், போதைப்பொருட்கள் பழக்கத்தில் இருந்து விடுபடச்செய்தல், வாழ்க்கைத்திறன் கல்வி என பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை போதை பொருள் விழிப்புணர்வு வாரம் கொண்டாட வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும் போதைப் பொருட்ளுக்கு எதிரான உறுதிமொழியை நாளை காலை 10.30 மணிக்கு ஒரே நேரத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் ஏடுக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளும் மேற்கொள்ள வேண்டும் என் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Next Story