போதை பொருள் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா


போதை பொருள் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போதை பொருள் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

தூத்தக்குடியில் இளைஞர்கள் போதை இல்லாத வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தூத்துக்குடியில் நடந்தது. இந்த போட்டியில் 40 கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இறுதி போட்டியில் தூத்துக்குடி யு.எஸ்.ஏ அணியும், சாக்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் விளையாடின. இதில் தூத்துக்குடி யு.எஸ்.ஏ அணி வெற்றி பெற்றது. ஒவ்வொரு போட்டி தொடக்கத்திலும், போட்டி முடிந்த பிறகும், போதை ஒழிப்பு குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் காமராஜ் கல்லூரி துணை முதல்வர் அசோக், கேம்ஸ் வில்லா ஸ்போர்ட்ஸ் அகாடமி ரைபின் தர்டிஸ், சாஸ் ஈவெண்ட்ஸ் செயல் அலுவலர் சந்திரிகா, வீனஸ் நிறுவன பொது மேலாளர் மணிகண்டன், கிளியோபட்ரா தியேட்டர் நிர்வாகி பிராஸர், அணுசக்திதுறை ஓய்வு பெற்ற அதிகாரி அந்தோணி தயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story