மளிகை கடையில் போதை பொருள் விற்றவர் கைது
கோட்டூர் அருகே மளிகை கடையில் போதை பொருள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர்
கோட்டூர்:
கோட்டூர் அருகே கம்பங்குடி மெயின் ரோட்டில் அப்துல்சமது (வயது 44) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் போதைப் பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் கோட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் மற்றும் போலீசார் அப்துல்சமது மளிகை கடையில் சோதனை செய்தனர். சோதனையில் அவரது கடையில் 6 பாக்கெட் போதைப் பாக்கு விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் சமதை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story