விபத்துக்குள்ளான காரில் ரூ.1 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்


விபத்துக்குள்ளான காரில் ரூ.1 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்
x

நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் கவிழ்ந்து விபத்து

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த லட்சுமிபுரம் அருகே வந்தபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போதை பொருட்கள்

மேலும் காரை சோதனை செய்ததில் அதில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா ஆகிய போதை பொருட்கள் அடங்கிய 15 மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நாட்டறம்பள்ளி போலீசார் காரில் இருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தியதாக 2 பேர் மீதும் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் போதை பொருட்களை கடத்தி வரும்போது விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கல் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் மேலேபாய் (வயது 25), அதே பகுதியை சேர்ந்த தர்பாத் சிங் மகன் சரண்சிங் (25) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story