போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
பனப்பாக்கம் அரசு பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். நெமிலி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சிவிலு, சாமிவேல் மற்றும் போலீசார் கலந்து கொண்டு மது, சிகரெட், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் பின்விளைவுகள் குறித்தும் அதனால் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் குறித்தும் மாணவர்களிடையே விரிவாக எடுத்துரைத்தனர். மாணவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் போதைபொருளுக்கு அடிமையாகாமல் தடுக்க உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
Related Tags :
Next Story