போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
வியாபாரிகளுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
அரக்கோணம் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையம் சார்பில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமை தாங்கினார். தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிகுமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் கலறந்து கொண்டு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய உடல் பாதிப்புகள் மற்றும் சமூக சீர்கேடுகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா தடைசெய்யப்பட்ட போதை பொருள், குட்கா, ஹெராயின் போன்றவை கடைகளில் விற்க கூடாது. அவ்வாறு எவரேனும் விற்பது தெரிய வந்தால் போலீசாருக்கு தகவல் கொடுங்கள். அவ்வாறு தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனறார்.தொடர்ந்து வியாபாரிகளிடம் போதை பொருள் தடுப்புக்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக போதை பொருள் தடுப்புக்கான உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர். நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்து ஈஸ்வரன், பாலாஜி, கணேசன், போலீசார் சிவகுமார் மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.