போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்


போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
x

பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் வழிகாட்டுதலின்படி ஆலங்காயம் அருகே வெள்ளகுட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் கலந்து கொண்டு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவும், குழந்தை திருமணம் தொடர்பாகவும், போக்சோ குற்றங்கள், சட்டம் குறித்தும், போதைப்பொருட்கள் குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி விளக்கி பேசினர்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story