போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
லத்தேரி அருகே போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
வேலூர்
லத்தேரி அருகே செஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பனமடங்கி போலீஸ் நிலையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு பள்ளி வளாகத்தில் நடந்தது.
தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் கலந்துகொண்டு போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, மாணவ-மாணவிகளுக்கு போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், கஞ்சா, புகையிலை, குட்கா போன்ற போதை பொருட்களின் தீய விளைவுகள், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியம், உயர் படிப்புகள் படித்து உயரும் வழிகள், தாய், தந்தை, ஆசிரியர்களின் அறிவுரைகள் பற்றி எடுத்து கூறினார்.
இதில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், போலீசார் டேவிட், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story