ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி


ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 21 Jun 2023 2:30 AM IST (Updated: 21 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்தது.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் உள்ள மார்க்கெட்டுக்கு திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி, கோவை, திருப்பூர், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. அதேபோல் வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வரவழைக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது முருங்கைக்காய் வரத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிக அளவு முருங்கைக்காய் வந்துள்ளது. இதனால் மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கிடையே வெளிமாநில முருங்கைக்காய் வரத்து அதிகரித்ததால், ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, கோவிந்தாபுரம், அய்யம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் விளையும் முருங்கைக்காய் விலையும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த மாதம் வரத்து அதிகரித்த நிலையிலும் ஒரு கிலோ செடி முருங்கை ரூ.12-க்கும், மரமுருங்கை ரூ.8-க்கும் என விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் தற்போது முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.


Next Story