மதுபோதையில் பஸ் இயக்கிய டிரைவர் கைது


மதுபோதையில் பஸ் இயக்கிய டிரைவர் கைது
x

வேப்பூரில் மதுபோதையில் பஸ் இயக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

ராமநத்தம்,

வேப்பூர் போலீசார் அங்குள்ள கூட்டுரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து மங்களூருக்கு சென்ற தனியார் பஸ்சை தடுத்து நிறுத்தினர். பின்னர் பஸ் டிரைவரான சின்னசேலம் அருகே அனுமந்தல் கிராமத்தை சேர்ந்த சின்னமணி (வயது 35) என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் மதுபோதையில் பஸ் இயக்கியது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னமணியை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story