மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் சாவு


மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
x

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரஞ்சன்குடி அருகே அடையாளம் தெரியாத நபர் நேற்று இரவு 10 மணியளவில் வாலிகண்டபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story