குடிபோதையில் நகை திருட்டு


குடிபோதையில் நகை திருட்டு
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிபோதையில் நகை திருடியதாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மதுரை மாவட்டம் தொட்டனம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் பாண்டி (வயது 28). இவரது மனைவி ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர். தனது மனைவியின் வீட்டிற்கு வந்தவர் அவரது நண்பருடன் மது அருந்தி உள்ளார். ரமேஷ் பாபு காலையில் பார்க்கும்போது தனது கையில் இருந்த பிரேஸ்லெட், மோதிரம் ஆகியவற்றை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.65 ஆயிரம் ஆகும். இது குறித்து குடிபோதையில் இருக்கும் போது தன்னுடன் மது அருந்திய ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தைச் சேர்ந்த மணி அச்சன் என்பவர் திருடியதாக கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story