மன்னார்குடி புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு


மன்னார்குடி புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 9 Nov 2022 12:45 AM IST (Updated: 9 Nov 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு ஏற்று கொண்டார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பாலச்சந்தர் திருவண்ணாமலை மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைப்பிரிவு துணை சூப்பிரண்டாக பணி மாறுதல் பெற்று சென்றார். இதையடுத்து மன்னார்குடி புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் பொறுப்பேற்று கொண்டார். இவர் மதுரையில் பயிற்சி துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நிலையில் பயிற்சி நிறைவு செய்து முதல் நியமனமாக மன்னார்குடி காவல் உட்கோட்டத்திற்கு துணை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story