திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய, ஓபிஎஸ் விடுத்த அழைப்புக்கு டிடிவி தினகரன் வரவேற்பு
கூட்டுத்தலைமை தான் அதிமுகவுக்கு சரியானது என உருவாக்கப்பட்டது டிடிவி தினகரனும், சின்னாம்மாவும் அதிமுகவில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்
சென்னை
ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவர் ஆதரவு பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நேற்றைய தினம் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லாது. ஜூலை 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
அன்பு சகோதரர் நானும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து சிறப்பாக செயல்பட்டோம். இரட்டை தலைமை என்பதேல்லாம் பிரச்சினை இல்லை. கூட்டு தலைமையாக செயல்படுவோம்.கூட்டுத்தலைமை தான் அதிமுகவுக்கு சரியானது என உருவாக்கப்பட்டது டிடிவி தினகரனும், சின்னாம்மாவும் அதிமுகவில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்
இந்த நிலையில் இதற்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற திரு.O.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். (1/2)
அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.