சாலையில் திடீர் பள்ளத்தால் தீயணைப்பு வாகனம் நடுவழியில் நிறுத்தம்மோட்டார்சைக்கிளில் சென்று வீரர்கள் தீயை அணைத்தனர்


சாலையில் திடீர் பள்ளத்தால் தீயணைப்பு வாகனம் நடுவழியில் நிறுத்தம்மோட்டார்சைக்கிளில் சென்று வீரர்கள் தீயை அணைத்தனர்
x

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் தீயணைப்பு வாகனம் நடுவழியில் நின்றது. வீரர்கள் மோமட்டார்சைக்கிளில் சென்று தீயை அணைத்தனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் தீயணைப்பு வாகனம் நடுவழியில் நின்றது. வீரர்கள் மோமட்டார்சைக்கிளில் சென்று தீயை அணைத்தனர்.

ஆலங்காயம் புதுமனை தெரு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் நேற்று காலை சமைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்றவைத்தபோது, எதிர்பாராத விதமாக சிலிண்டரின் ரெகுலேட்டர் பகுதி திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த பெருமாள் உடனடியாக ஆலங்காயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் விரைந்து புறப்பட்டனர். ஆனால் தீயணைப்பு நிலையம் அமைந்துள்ள பெத்தூர் -ஆலங்காயம் பகுதியை இணைக்க கூடிய ஒரே ஒரு முக்கிய சாலையான பெத்தூர் தார் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டிருந்த காரணத்தினால், தீயணைப்பு வாகனம் அவ்வழியே செல்ல முடியாமல் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

எனினும் பொறுப்பை உணர்ந்த தீயணைப்பு வீரர்கள் மோட்டார்சைக்கிளில் பெருமாள் வீட்டிற்கு சென்று அங்கு எரிந்த சிலிண்டர் மீது, ஈர கோணிப்பையை போர்த்தி, மணல் கொட்டி தீயை அணைத்தனர்.

ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் கிணறுகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், பெத்தூர் மற்றும் ஆலங்காயம் பகுதியை இணைக்கக்கூடிய முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழும் பொழுது தீயணைப்புத் துறையினர், வாகனத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, சாலையில் ஏற்படுத்தியுள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story