பராமரிப்பு பணிக்காக காவிரி பாலம் முழுவதும் மூடப்பட்டதால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு


பராமரிப்பு பணிக்காக காவிரி பாலம் முழுவதும் மூடப்பட்டதால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
x

பராமரிப்பு பணிக்காக காவிரி பாலம் முழுவதும் மூடப்பட்டதால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

திருச்சி

பராமரிப்பு பணிக்காக காவிரி பாலம் முழுவதும் மூடப்பட்டதால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

பாலம் சீரமைப்பு பணிகள்

திருச்சி- ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலம் கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாக பாலத்தின் பேரிங்குகள் முழுமையாக சேதமடைந்தது. இதையொட்டி பராமரிப்பு பணிகள் செய்வதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி பாலம் மூடப்பட்டது.

எனினும் காவிரி பாலத்தில் 2 மீட்டர் இடைவெளி விட்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதில் கார் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பைபாஸ் வழியாக ஸ்ரீரங்கம் பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டது.

இந்நிலையில் காவிரி பாலத்தை ஹைடிராலிக் ஜாக்கி மூலம் தூக்கி வைத்து பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக காவிரி பாலம் முழுவதும் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் காவிரி பாலம் முழுவதுமாக மூடப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் நேற்று ஸ்ரீரங்கம், மேலூர், திருவானைக்காவல் ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி, அலுவலக பணிக்கு இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர். அவர்கள் சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலை, கும்பகோணத்தான் சாலை, ஓயாமரி சாலை வழியாக அண்ணாசிலை, சத்திரம் பஸ் நிலையம் உள்ளிட்ட மாநகர் பகுதிக்கு வருகை தருகின்றனர். காவிரி பாலத்தின் மிக அருகாமையில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் சிலர் நடந்து செல்வதை பார்க்க முடிந்தது.

இதுபோல ஒய் ரோடு, கல்லணை ரோடு, சர்க்கார்பாளையம், சஞ்சீவ் நகர் பகுதி மக்களும் நேற்று பைபாஸ் ரோடு வழியாக சென்றனர். இதனால் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஓயாமரி பாலத்தில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் போக்குவரத்து சீராகிவிடும் என போலீசார் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story