குடும்ப வறுமை காரணமாகதூக்குப்போட்டு பெண் தற்கொலை


குடும்ப வறுமை காரணமாகதூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

தேனி அல்லிநகரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் நாகஜோதி (வயது 33). இவர் கணவரை பிரிந்து மகன் அஜய்யுடன் வசித்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அல்லிநகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் நாகஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story