மழை பெய்யாததால் பருத்தி செடிகள் கருக தொடங்கின


மழை பெய்யாததால் பருத்தி செடிகள் கருக தொடங்கின
x

முதுகுளத்தூர் தாலுகாவில் மழை பெய்யாததால் பருத்தி செடிகள் கருக தொடங்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் தாலுகாவில் மழை பெய்யாததால் பருத்தி செடிகள் கருக தொடங்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

பருத்தி சாகுபடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பருவமழை சீசனை எதிர்பார்த்து தான் நெல் விவசாய பணிகளையே விவசாயிகள் ஈடுபடுகின்றனர். நெல் விவசாயத்தை காட்டிலும் மாவட்டத்தில் பருத்தி, மிளகாய் சாகுபடி அதிகமாக நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய மட்டியாரேந்தல், தேரிருவேலி, இதம்பாடல், பனையடியேந்தல், நல்லிருக்கை உள்ளிட்ட பல கிராமங்களில் பருத்தி செடிகளை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர்.

தற்போது பருத்தி செடிகள் வளர தொடங்கி உள்ளன. ஆனால் முதுகுளத்தூர் பகுதியில் சரிவர மழை பெய்யவில்லை. இதனால் தண்ணீர் இல்லாமல் பருத்தி செடிகள் காய்ந்து கருகி வருவதோடு மட்டுமல்லாமல் பூச்சி தாக்குதலாலும் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விளைச்சல் இல்லை

இது குறித்து நல்லிருக்கை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறும் போது:-

இந்த ஆண்டு பருத்தி விவசாயம் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.

மழையே பெய்யாததால் பருத்தி விளைச்சலே இல்லை. அது மட்டும் இல்லாமல் பூச்சி தாக்குதலாலும் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பருத்தி விளைச்சல் ஓரளவு இருந்த நிலையில் இந்த ஆண்டு அதிக அளவு பூச்சி தாக்குதலாலும் பாதிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏற்கனவே முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய பெரும்பாலான கிராமங்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பருத்தி விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றமும் வேதனையும் அடைந்துள்ளனர்.


Next Story