முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் உப்புக்கோட்டை பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிப்பு
முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் உப்புக்கோட்டை பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டத
தேனி
உப்புக்கோட்டை, உப்பார்பட்டி ஆகிய பகுதிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக முல்லைப்பெரியாற்றில் 10-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உறை கிணறுகள் மூலம் டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், மேலச்சொக்கநாதபுரம், சுந்தராஜபுரம், தப்புக்குண்டு, தாடிச்சேரி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் உப்புக்கோட்டை பகுதியில் கடந்த 6 நாட்களாக தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் டிராக்டர் டேங்கர் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story