சீராக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் பாதிப்பு
சீராக குடிநீர் வினியோகம் செய்யாததால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா வன்னிவேடு ரபிநகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகம் சீராக குடிநீர் வினியோகம் செய்வது இல்லை. எங்கள் பகுதியில் நிலத்தடி நீரும் சரியாக கிடைப்பது இல்லை. ஆகையால் இங்குள்ள பொதுமக்கள் பஞ்சாயத்து வினியோகிக்கும் நீரை மட்டுமே நம்பி இருப்பதால் போதுமான குடிநீர் கிடைக்கால் பாதிக்கப்பட்டு வருகிறார்கல்.
குடிநீர் வினியோகம் செய்யும்போது இந்த பகுதிக்கு சரியாக குடிநீர் வருவது இல்லை. பஞ்சாயத்து நிர்வாகம் இந்த பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story