மழை காரணமாக இருளர் இன மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பு
மழை காரணமாக இருளர் இன மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் உள்ள சென்னசமுத்திரம் மதுரா மாந்தாங்கல் கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். தற்போது பெய்துவரும் மழையால் இவர்களுடைய குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பூங்கொடி விரைந்து சென்று பார்வையிட்டு அவர்களை அருகே உள்ள இ சேவை மையத்தில் தங்க வைத்து. மதியம் உணவுகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், உடைகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
கலவை தாசில்தார் சமீம், வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம நிர்வாக அதிகாரி விஜி, கிராம உதவியாளர் குப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story