கோபியில் சாலை அமைக்கும் பணியின்போதுஎந்திரம் சாய்ந்து விழுந்து மின்கம்பம் சேதம்


கோபியில் சாலை அமைக்கும் பணியின்போதுஎந்திரம் சாய்ந்து விழுந்து மின்கம்பம் சேதம்
x

கோபியில் சாலை அமைக்கும் பணியின்போது எந்திரம் சாய்ந்து விழுந்து மின்கம்பம் சேதம் ஆனது

ஈரோடு

கோபி-சத்தி சாலையில் சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறையினரால் நடைபெற்று வருகிறது. அதேபோல் நேற்று அதிகாலை கோபியில் உள்ள தனியார் பள்ளிக்கூட பிரிவு அருகே பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது எதிர்பாராதவிதமாக சாலை போடும் எந்திரம் மோதியது. இதில் மின்கம்பமானது சாய்ந்து சேதமானது.

இதனால் கன்னிகா பரமேஸ்வரி வீதி, சி.கே.கே.நகர், கச்சேரி வீதி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் அங்கு சென்று, சேதமான மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரத்துக்கு பிறகு சேதமான மின்கம்பம் சரிசெய்யப்பட்டது.


Next Story