100 நாள் பணியின் போது கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு


100 நாள் பணியின் போது கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு
x

வாணியம்பாடி அருகே 100 நாள் பணியின் போது கிணற்றில் தவறி விழுந்தவர் பலியானார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த பெரியகுரும்பதெரு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 41). இவர் அதே பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பவரது நிலத்தில் 100 நாள் பணிதிட்டத்தின் கீழ் வரப்பு கட்டும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது திடீரென கால்தவறி அங்கிருந்த கிணற்றில் விழுந்தார். உடனடியாக சக பணியாளர்கள் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் இருந்து தேவராஜின் உடலை மீட்டனர். பின்னர் வாணியம்பாடி தாலுகா போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story