அதிமுக ஆட்சியில் குட்கா பொருட்களை ஆற்றுவெள்ளம் போல் திறந்து விட்டார்கள் - தங்கம் தென்னரசு


அதிமுக ஆட்சியில் குட்கா பொருட்களை ஆற்றுவெள்ளம் போல் திறந்து விட்டார்கள் - தங்கம் தென்னரசு
x

அதிமுக ஆட்சிக்காலத்தில் குட்கா பொருட்களை ஆற்றுவெள்ளம் போல் திறந்து விட்டார்கள் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னை,

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக ஆட்சியில் காழ்ப்புணர்ச்சிக்கு இடமில்லை. திமுக ஆட்சி அமைந்த பின் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழக காவல்துறை சுதந்திரமாகவே செயல்படுகிறது. திமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகள் முற்றிலும் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர். திமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.

பொய் குற்றச்சாட்டு சொல்வதை பொறுப்பை உணர்ந்து எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசின் மீது பொய்யான அவதூறுகளை அள்ளி வீச முற்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் தான் சட்டம், ஒழுங்கு மோசமாக இருந்தது.

ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்தை வலுவாக உருவாக்கவில்லை. நீதிமன்றமே தள்ளுபடி செய்யும் வகையில் ஆன் லைன் ரம்மி தடைச்சட்டத்தில் குறைபாடுகள் இருந்தன. ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆகிய இருவருமே மாநில உரிமைகளை விட்டு கொடுத்தவர்கள்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டுகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் சீர்கெட்டு இருந்த சட்ட ஒழுங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சரி செய்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story