இடைத்தேர்தலையொட்டிமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு


இடைத்தேர்தலையொட்டிமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு
x

சுழற்சி முறையில் ஒதுக்கீடு

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் ஆகியன தயார் நிலையில் உள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1,408 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினியின் மூலமாக சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் நேற்று நடைபெற்றது.

ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், மின்னணு வாக்குப்பதிவு எந்திர பொறுப்பு அதிகாரி மோகனசுந்தரம் ஆகியோர் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளர் சிவகுமாரிடம் வழங்கினார்கள். இதில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு 467 கட்டுப்பாட்டு கருவிகளில் 286 கருவிகளும், 474 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 286 எந்திரங்களும், 467 வி.வி.பேட் கருவிகளில், 310 கருவிகளும் என மொத்தம் 882 எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

முன்னதாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.


Next Story