பந்தயம் நடந்த போது சக்கரம் உடைந்த நிலையில் ஓடிய மாட்டு வண்டியால் பரபரப்பு


பந்தயம் நடந்த போது சக்கரம் உடைந்த நிலையில் ஓடிய மாட்டு வண்டியால் பரபரப்பு
x

பந்தயம் நடந்த போது சக்கரம் உடைந்த நிலையில் ஓடிய மாட்டு வண்டியால் பரபரப்பு ஏற்பட்டது

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே பதினெட்டாங்குடியில் மாட்டுவண்டி பந்தைய நண்பர்கள் சார்பாக மாட்டுவண்டி பந்தையம் நடைபெற்றது. தேனி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 38 ஜோடி பந்தய மாடுகள் போட்டியில் கலந்துகொண்டன. அப்போது பெரியமாடு பிரிவில் நடைபெற்ற போட்டியின்போது மாட்டு வண்டிகள் ஒன்றோடு ஒன்று முந்தும் முயற்சியில் ஈடுபட்ட நேரத்தில் ஒரு மாட்டு வண்டியின் சக்கரம் உடைந்த நிலையிலும் அந்த வண்டியின் ஓட்டுனர் (சாரதி) லாவகமாக பந்தய எல்கை வரை மாட்டுவண்டியை ஓட்டி வந்தது பார்வையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சாரதிக்கும் மாட்டுவண்டிக்கும் பாராட்டி பரிசு வழங்கப் பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிக்கும் பரிசு தொகை மற்றும் நினைவு கோப்பை வழக்கப்பட்டது.


Next Story