துவாக்குடி, திருவெறும்பூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்
துவாக்குடி, திருவெறும்பூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் திருச்சி கிழக்கு மன்னார்புரம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை நேருநகர், அண்ணாவளைவு, ஏ.ஓ.எல்., அக்பர்சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன்மேடு, பெல்நகர், இந்திராநகர், பெல்டவுன்ஷிப்பில் சி செக்டார் மற்றும் ஏ, இ, ஆர் மற்றும் பிஎச் செக்டார், தேசிய தொழில்நுட்பக்கழகம் (என்.ஐ.டி.), துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மாநகர், தேவராயநேரி, பொய்கைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
இதேபோல் திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை திருவெறும்பூர், பத்தாளப்பேட்டை, நவல்பட்டு, டி-நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், கிருஷ்ணசமுத்திரம், புதுத்தெரு, வேங்கூர், மேலகுமரேசபுரம், அண்ணாநகர், சூரியூர், எம்.ஐ.இ.டி., சோழமாநகர், பிரகாஷ்நகர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, நேருநகர், போலீஸ்காலனி, பாரத்நகர் 100 அடிரோடு, குண்டூர், மலைக்கோவில், கிளியூர், பர்மாகாலனி, கூத்தைப்பார், பூலாங்குடி, பழங்கனாங்குடி, காவேரிநகர் மற்றும் சுற்றுவட்டார பகதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.