மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் ரத்து


மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் ரத்து
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி நகர மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி நகர மின்சார வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்பார்வை பொறியாளர் தலைமையில் தூத்துக்குடி நகர உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் இந்த முகாம் ரத்து செய்யப்படுகிறது. இந்த கூட்டத்துக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.


Next Story