மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி மின் பொறியாளர் அலுவலகத்தில், மாவட்ட மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருப்புங்கூர், புங்கனூர், செம்பனார்கோவில், கீழமாத்தூர், மேலமாத்தூர், ஆக்கூர், தளச்சங்காடு, சின்னங்குடி, திருக்கடையூர், தரங்கம்பாடி, மாணிக்கப்பங்கு, திருக்களாச்சேரி, பூம்புகார், கிடாரம் கொண்டான், சென்பனிருப்பு, கீழையூர், திருவெண்காடு, நாங்கூர், மணல்மேடு, காளி, பட்டவர்த்தி, சித்தமல்லி, திருமுல்லைவாசல், கூழையார், திருச்சிற்றம்பலம், அரசூர், ஆச்சாள்புரம், மாங்கணாம்பட்டு, புத்தூர், மாதிரி வேலூர், வடரங்கம், அகனி, குன்னம், கொள்ளிடம், ஆணைக்காரன் சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையார், புதுப்பட்டிணம், மாதானம், பழையபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன் பெறலாம். இவ்வாறு செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story