மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
காயல்பட்டினத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
ஆறுமுகநேரி:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான துறை சார்பில் காயல்பட்டினத்தில் மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் காயல்பட்டினம் பெரிய நெசவு தெருவில் உள்ள பெண்கள் தைக்காவில் நடைபெற்றது. கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் கலந்துகொண்டு மின் நுகர்வோர்கள் குறைகளை கேட்டு அதற்கு அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதில் திருச்செந்தூர் செயற்பொறியாளர் விஜய சங்கரபாண்டியன், செயற்பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். காயல்பட்டினம் ஆறுமுகநேரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த குறைகள் மட்டும் அல்லாமல் பொதுவாக உள்ள குறைகளையும் கூறினார்கள்.
ஆறுமுகநேரி பகுதியில் ஒரே ஒரு மின் கம்பியாளரை வைத்து 18,500 மின் இணைப்புகளை பராமரிக்க வேண்டிய அவல நிலை இருப்பதாகவும,் உடனடியாக மின் கம்பியாளர் நியமிக்க வேண்டும் என்று பா,ஜனதா கட்சியின் சார்பில் தங்கபாண்டியன் கூறினார்.
மேலும் காயல்பட்டினத்தில் உள்ள மக்கள் உரிமை நிலை நாட்டல் பிரிவின் நிர்வாகி, மற்றும் தி.மு.க. நகர அவை தலைவர் மொகைதின் தம்பி, தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும், காயல்பட்டினம் நகராட்சி கவுன்சிலருமான ஓடை சுகு, நகராட்சி கவுன்சிலர் அபூபக்கர் சித்திக், துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, முன்னாள் துணைத் தலைவர் சதக்கத்துல்லா, ஜாஹிர் உட்பட பலர் கலந்துகொண்டு நகரின் முக்கிய குறைகளை எடுத்து கூறினார்கள்.