இ-ஆபிஸ் செயலியை பயன்படுத்த மின் ஆளுமை பயிற்சி
கணியம்பாடியில் இ-ஆபிஸ் செயலியை பயன்படுத்த மின் ஆளுமை பயிற்சி நடைபெற்றது.
வேலூர்
தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் இ-ஆபிஸ் செயலியை பயன்படுத்தவும், அனைத்து அலுவலகங்களிலும் இந்த செயலி மூலமாகவே அனைத்து கோப்புகளையும் கையாள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இ-ஆபிஸ் செயலியை பயன்படுத்துவது தொடர்பாக, மின் ஆளுமை பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் வரவேற்றார். வேலூர் மாவட்ட மின் ஆளுமை மேலாளர் அரவிந்த்குமார் பயிற்சி அளித்தார்.
Related Tags :
Next Story