அதிகாலையில் திடீர் மழை
சங்கராபுரத்தில் அதிகாலையில் திடீர் மழை
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயில் கொடுமை தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். புழுக்கத்தால் இளநீர், பதனீர், பழச்சாறு, குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகியும், தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, பனம்நுங்கு ஆகியவற்றை தின்றும் தாகத்தை தணித்து வருகின்றனர். மழை பெய்தால்தான் வெப்பம் தணியும் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதையடுத்து சங்கராபுரத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென மழை பெய்தது. முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பொழிந்தது. சுமார் 30 நிமிடம் பெய்த இந்த மழையால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story