வக்கீல்களுக்கு நிலவேம்பு கசாயம்
நெல்லை கோர்ட்டில் வக்கீல்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
கொேரானா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில் தமிழக அரசு முககவசம் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் பரப்பாடி காமராஜ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, நிலவேம்பு கசாயத்தை வக்கீல்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் கோர்ட்டில் உள்ள நீதிபதிகள் மற்றும் கோர்ட்டு அலுவலர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சமீனா, 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மநாபன், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி தீபா, முதன்மை சார்பு நீதிபதி அமிர்தவேலு மற்றும் குற்றவியல் நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், வக்கீல்கள் ராமேஸ்வரன், பழனி, சொக்கேந்திரன், கணேசன், சிதம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.