கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி
கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
கும்பகோணம்:
கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
ஈஸ்டர் சிறப்பு திருப்பலி
கும்பகோணம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள தூய அலங்கார அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் திருநாளையொட்டி ஆயர் அந்தோணிசாமி அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்து. முன்னதாக உலகத்தில் இருள் விலகி வெளிச்சம் உண்டானதை குறிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு, ஏசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்வு நாடகமாக நடத்தப்பட்டது. திருப்பலியில் பங்குத்தந்தை பிலோமின்தாஸ், உதவி பங்கு தந்தையர்கள் எட்மண்ட், பிரேம்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய திருச்சபை தோமா ஆலயம்
கும்பகோணம் தஞ்சை மெயின் ரோடு பேட்டை பாக்கியநாதன் தெருவில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை தூய தோமா ஆலயத்தில் ஈஸ்டர் ஆராதனை ஆயர் ராய்கெசியான் தலைமையில் நடைபெற்றது. ஆராதனையில் உயிர்தெழுந்த ஏசு கிறிஸ்துவின் துதி பாடல்கள், சிறப்பு பாடல்கள் பாடப்பட்டது. ஆயர் ஈஸ்டர் சிறப்பு செய்தியை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. ஆராதனையில் திரளான சபை மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செயலாளர் ஸ்ரீராஜ், பொருளாளர் ஆல்பர்ட் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், சபை அங்கத்தினர்கள் செய்திருந்தனர்.
திருச்சிலுவை ஆலயம்
கும்பகோணம் மேம்பால இறக்கம் நீடாமங்கலம் சாலையில் அமைந்துள்ள தமிழ் சுவிசேச லுத்ரன் திருச்சபை திருச்சிலுவை ஆலயத்தில் ஆயர் ஜான்சன் சாமுவேல் தலையைில் ஈஸ்டர் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான சபை மக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் புனித சவேரியார் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆலயத்தின் பங்கு தந்தை ஜான் எட்வர்ட், உதவி தந்தை அற்புத சந்தியாகு மற்றும் அருட் சகோதரிகள் கலந்துகொண்டு திருப்பலியை நிறைவேற்றினர். நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை சி.எஸ்.ஐ. உலக மேப்பர் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி அதிகாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை உலக அமைதிக்காகவும், இந்திய அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திருச்சபை ஆயர் ஞானகமலம் கலந்துகொண்டு ஆராதனையை நடத்தினார். இதில் ஏராளமான திருச்சபை மக்கள் கலந்துகொண்டனர்.
பட்டுக்கோட்டை உலக ரட்சகர் ஆலயத்தில் நடந்த திருப்பலியில் பங்குத்தந்தை அந்தோணிசாமி, குருவிக்குளம் வளனார் கல்லூரி செயலாளர் ஜோசப் கென்னடி, பட்டுக்கோட்டை தாமஸ் உயர்நிலைப்பள்ளி தாளாளர் ஸ்டீபன்ராஜ் மற்றும் அருட்சகோதரர்கள், திருச்சபை மக்கள் கலந்துகொண்டனர். இதேபோல் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.