கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை


கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை
x

குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலி நடந்தது. இதில் பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி

குழித்துறை,

குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலி நடந்தது. இதில் பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈஸ்டர் பண்டிகை

இயேசு கிறிஸ்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவர் மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தார். இதை ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நாளில் கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி போன்றவை நடைபெறும். இதில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வார்கள்.

ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் செல்லங்கோணம் மலங்கரை கத்தோலிக்க ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிறைவேற்றினார். இரவிபுதூர்க்கடை கத்தோலிக்க ஆலயத்தில் குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் யேசுரெத்தினம் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

குழித்துறை மறைமாவட்ட தலைமை பேராலயமான திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயத்தில் பங்குத்தந்தை பீட்டர் திருப்பலி நிறைவேற்றினார். வெட்டுமணி தூய அந்தோணியார் திருத்தல பங்கில் பங்குதந்தை அந்தோணி முத்து தலைமையில் ஈஸ்டர் பண்டிகை திருப்பலி நடந்தது. இணை பங்குத்தந்தை மரியமார்ட்டின், ஆன்மிக வழிகாட்டி டென்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுபோல் குழித்துறை மறை மாவட்டம் மற்றும் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலிகளும், சி.எஸ்.ஐ. ஆலயங்கள், லுத்தரன் மிஷன் ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. இவற்றில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story