கடலங்குடி, பெரம்பூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
கடலங்குடி, பெரம்பூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மயிலாடுதுறை
கடலங்குடி, பெரம்பூர் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் கடலங்குடி, வானாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, ஆலங்குடி, குத்தாலம், பெரம்பூர், கடக்கம், கிளியனூர், சேத்தூர், எடக்குடி, பாலூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மயிலாடுதுறை மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story