ெபாக்லைன் எந்திர டிரைவர் விஷம்
தக்கலை அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் பொக்லைன் எந்திர டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தக்கலை:
தக்கலை அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் பொக்லைன் எந்திர டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பொக்லைன் எந்திர டிரைவர்
தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் பட்டாணி குளம் தெருவைச் சேர்ந்தவர் சேகர்(வயது 47), பொக்லைன் எந்திர டிரைவர். இவருக்கு மீனாகுமாரி (38) என்ற மனைவியும், 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். மீனாகுமாரி தக்கலையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.
சேகர் டிரைவராக வேலை செய்து வருவதால் வாரத்திற்கு ஒருநாள் மட்டும் வீட்டிற்கு வருவது வழக்கம். அப்போதும், மது குடித்து விட்டு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
விஷம் குடித்தார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் சேகர் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, மீனாகுமாரி கணவர் சேகரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் சேகர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இதையடுத்து காலையில் மீனாகுமாரி மகளை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக சென்று விட்டார்.
அப்போது, வீட்டில் தனியாக இருந்த சேகர் விஷம் குடித்து விட்டு வாந்தி எடுத்துள்ளார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இதுபற்றி மீனாகுமாரிக்கு தெரிவித்தனர். அவர் சேகரை மீட்டு தக்கலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் சேகர் பரிதாபமாக இறந்தார்.
சோகம்
இதுகுறித்து சேகரின் மனைவி மீனாகுமாரி தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ேமலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மது குடித்ததை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.