எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசவில்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசவில்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

கோப்புப்படம் 

தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை,

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து குறித்து பேசிய அமைச்சர் உதியநிதி ஸ்டாலின், கடந்த 7-ம் வெளியிட்ட அறிக்கையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து தெரிவித்து இருப்பதாக அவரை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான மனுவில், "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி அவதூறாக பேசி இருக்கிறார் என்றும், அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி பேசியதற்கு நஷ்ட ஈடாக ரூ. 1 கோடியே 10 லட்சம் கொடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "சனாதனத்தை எதிர்க்கும் பணியில் செய்தியாளர்களும் தீவிரமாக செயல்பட்டு வருவதற்கு எனது நன்றிகள்.

நான் எடப்பாடி பழனிசாமி குறித்து தரக்குறைவாக பேசவில்லை. சனாதனத்திற்கு எதிராக பேசியதால் அவர் மனம் கஷ்டப்பட்டு இருக்கலாம் என நினைக்கிறேன். இது குறித்து எனது வழக்கறிஞர்களிடம் கேஎட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்து உள்ளார்.


Next Story