எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்


எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்
x

சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் மீது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 2018-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுவை தள்ளுபடி செய்து கடந்த 18-ந்தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும் போது தனது தரப்பு கருத்தையும் கேட்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Next Story