அதிமுக எழுச்சி மாநாடு: மதுரை வந்தடைந்தார் எடப்பாடி பழனிசாமி... தொண்டர்கள் உற்சாக வரவேற்பு...!


அதிமுக எழுச்சி மாநாடு: மதுரை வந்தடைந்தார் எடப்பாடி பழனிசாமி... தொண்டர்கள் உற்சாக வரவேற்பு...!
x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள், நிர்வாகிகள் பஸ், கார் உள்ளிட்டவற்றில் மதுரைக்கு பயணித்த வண்ணம் உள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. சார்பில் மதுரையில் எழுச்சிமிகு மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக நடத்தி முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகள் கொடுக்கப்பட்டு இரவு-பகலாக நடந்தது. மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்குபெற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள், நிர்வாகிகள் பஸ், கார் உள்ளிட்டவற்றில் மதுரைக்கு பயணித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில்நாளை நடக்கவிருக்கும் அதிமுக மாநாட்டிற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தடைந்தார்.மதுரை வந்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story