தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார் எடப்பாடி பழனிசாமி


தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 13 Aug 2022 10:28 AM IST (Updated: 13 Aug 2022 10:29 AM IST)
t-max-icont-min-icon

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் இன்று தேசியக் கொடி ஏற்றினார்.

சென்னை,

நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் 'சுதந்திர தின அமிர்த பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இதன் ஒரு அங்கமாக 'இல்லம் தோறும் தேசிய கொடி' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதன்படி, இன்று முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் இன்று தேசியக் கொடி ஏற்றினார்.


Next Story